ADDED : டிச 11, 2024 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் தேசிய பழங்குடியினர் தின விழா நடந்தது.
விழாவிற்கு சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆண்டப்பன் வரவேற்றார்.
துணைத் தலைவர் கமலநாதன் தொடக்க உரையாற்றினார்.
நாகராணி ஜவுளி ஸ்டோர் ரகுநந்தன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், வள்ளலார் மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் மலையணி பேரவை சார்பில் ராமசாமி, அருள்குமார், பாக்கியராஜ் பங்கேற்றனர்.
பழங்குடியின போராளி பிரசா முண்டா படத்தினை திறந்து வைத்து கவிஞர் மலரடியான் சிறப்புரையாற்றினார்.
துணை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.