/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா
/
ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : ஜூலை 29, 2025 08:56 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலூர் அடுத்த கொளப்பாக்கம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
திருக்கோவிலுார் அடுத்த கொளப்பாக்கம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், புதிய கட்டட திறப்பு விழா, டிஜிட்டல் வகுப்பறை துவக்கம் மற்றும் மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. பள்ளியின் தாளாளர் வசந்தன் தலைமை தாங்கினார். பள்ளி கட்டடத்தை ரோட்டரி சங்க தலைவர் கோதம்சந்த் திறந்து வைத்தார். டிஜிட்டல் வகுப்பறையை முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர், பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். ரோட்டரி சங்க செயலாளர் ராஜேஷ் குமார், பொருளாளர் காமராஜ், சாசன தலைவர் வாசன், நிர்வாகி சரவணன் ஆகியோர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, சவுந்தர்ராஜன், முன்னாள் ராணுவ வீரர் கல்யாணம்குமார், பாலாஜி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சதீஷ்பாண்டியன் நன்றி கூறினார்.