/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முப்பெரும் விழா
/
உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முப்பெரும் விழா
உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முப்பெரும் விழா
உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முப்பெரும் விழா
ADDED : டிச 15, 2024 07:54 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை நீதிமன்றத்தில் நடந்த முப்பெரும் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்றார்.
உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் துவக்க விழா, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் விழா, மரக்கன்றுகள் நடும் விழா என முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி. தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைய குழு உறுப்பினர் தண்டபாணி தலைமை தாங்கி புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி மரக்கன்று நட்டார். உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இருசன் பூங்குழுலி, முன்னிலை வகித்தார்.
கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம், வழக்கறிஞர் பொன் ராவணன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரமேஷ் வாழ்த்தி பேசினர். அரசு வழக்கறிஞர்கள் உட்பட அனைத்து வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
உளுந்துார்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோமதி நன்றி கூறினார்.