கள்ளக்குறிச்சி: உலக பட்டினி தினத்தையொட்டி, த.வெ.க., சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட த.வெ.க.,சார்பில், நான்கு முனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மாவட்ட பொருளாளர் ஜவகர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய தலைவர்கள் வரதன், திலீப்குமார், ஸ்டாலின் ஆகியோர் செய்தனர். இதில் நிர்வாகிகள் சுதாகர், சின்னதுரை, அருண்குமார், அறிவுமணி, வேல்முருகன், சூரியன், பரத், மோகன், சுரேந்திரன், ராமச்சந்திரன், ஹரிஹரன், ஹரிஹரபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம், உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதி தலைமை த.வெ.க., சார்பில், மணிக்கூண்டு அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி தலைமையில், நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கினர்.
இதில், இணை செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட, நகர, ஒன்றிய, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.