/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சைலண்ட் மோடில் த.வெ.க., நிர்வாகிகள்: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
/
சைலண்ட் மோடில் த.வெ.க., நிர்வாகிகள்: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
சைலண்ட் மோடில் த.வெ.க., நிர்வாகிகள்: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
சைலண்ட் மோடில் த.வெ.க., நிர்வாகிகள்: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
ADDED : அக் 27, 2025 11:29 PM

வி ஜய் துவக்கிய த.வெ.க., வில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை சற்று அதிகம். அரசியல் ரீதியாக பொறுப்பாளர்கள் நியமனம் என்பது முழுமை பெறவில்லை. ரசிகர் மன்ற நிர்வாகிகள் கட்சி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அரசியலில் இறங்கினார்களா, ரசிகர்களாக உள்ளார்களா என சந்தேகம் உள்ளது.
ஒரு கட்சி நிர்வாகி என்றால் ஊடகங்களை அணுகி கட்சி நிகழ்வுகளை செய்தியாக்குவதும், போலீஸ் பர்மிஷன் பெறுதல், உள்ளூர் பொது பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பது என்ற எந்த நிகழ்விலும் பங்கேற்காதவர்களாக உள்ளனர்.
இன்னும் சொல்லப்போனால் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதற்கு கூட அஞ்சும் நிலையில் உள்ளனர்.
ஆனால் பொது வெளியில் 5 பேர் கூடி விட்டால் உற்சாக மிகுதியில் ஆர்பறிக்கும் கும்பலாக உள்ளனர்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் விஜய் ரசிகர்கள் சற்று அதிகம் என்பதால், கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் மீதான பற்று சிறிதும் குறையாத இப்பகுதி ரசிகர்கள், அரசியல் மயப்படுத்தப்பட்ட மாவட்ட ஒன்றிய தலைமையின் வழிகாட்டல்கள் ஏதும் இல்லாததால் அமைதி காப்பது தொண்டர்களை மனவேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
விஜய் தலைமையில் தான் தேர்தல் என்ற ரசிகர்களின் கொக்கரிப்பு கரூர் சம்பவத்திற்கு பிறகு சற்று சுனங்கி போய் இருக்கிறது.
அரசியலில் எவ்வளவு பெரிய இழப்பையும், வலியையும் தாங்கி அதே வேகத்தில் மீண்டெழும் வலிமை வேண்டும் அது த.வெ.க., என்ற அரசியல் மயப்படுத்தப்பட்ட அமைப்பிற்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இதற்கே இப்படி என்றால் பண பலம், படை பலம் படைத்த வேட்பாளரை இனம் கண்டு, களம் இறக்கி, பிரதான கட்சிகளுடன் போட்டி களத்தில் புரள வேண்டும். இவை எல்லாவற்றுக்கு மேலாக தேர்தல் நாளில் ஓட்டை அறுவடை செய்ய வேண்டும்.
இத்தனை சிக்கல்களையும் இப்பொழுதுதான் சிந்திக்க துவங்கியிருக்கின்றனர் த.வெ.க., நிர்வாகிகளும், தொண்டர்களும்.
இதுவே அவர்களின் அமைதிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கவலையில் உறைந்து போய் உள்ளது.

