/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிமென்ட் மூட்டைகளுடன் சென்ற லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
/
சிமென்ட் மூட்டைகளுடன் சென்ற லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சிமென்ட் மூட்டைகளுடன் சென்ற லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சிமென்ட் மூட்டைகளுடன் சென்ற லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ADDED : ஜன 06, 2025 06:50 AM

கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே சிமென்ட் மூட்டைகளுடன் சென்ற லாரி திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, சோழபுரத்தை சேர்ந்தவர் உபயதுல்லா மகன் அசாருதீன்,40; டிரைவர். இவர், அரியலுாரில் இருந்து 240 சிமென்ட் மூட்டைகளை கனரக லாரியில் ஏற்றிக்கொண்டு வரஞ்சரம் வழியாக கள்ளக்குறிச்சிக்கு நேற்று காலை சென்றார்.
காலை 9.45 மணியளவில் தியாகதுருகம் அடுத்த நாகலுார் பகுதியில் சென்றபோது, லாரியின் பின்பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப்பார்த்த டிரைவர் அசாருதீன் லாரியை ஓரமாக நிறுத்தி, இறங்கினார். சற்று நேரத்தில் கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் இருசம்மாள் தலைமையிலான தியாகதுருகம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இதில், லாரியின் பின்பக்க டயர்கள் மற்றும் வாகனம் என ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது.
லாரி பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ பிடித்து எரிந்திருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். தீயை அணைத்த பிறகு காலை 10.15 மணியளவில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.