தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காசநோய் ஒழிப்பு திட்ட நுண்கதிர் பரிசோதனை வாகனம் இயக்கம்

காசநோய் ஒழிப்பு திட்ட நுண்கதிர் பரிசோதனை வாகனம் இயக்கம்

காசநோய் ஒழிப்பு திட்ட நுண்கதிர் பரிசோதனை வாகனம் இயக்கம்


ADDED : டிச 09, 2024 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2024 07:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காசநோய் ஒழிப்பு திட்ட நுண்கதிர் பரிசோதனை வாகனம் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நுண்கதிர் பரிசோதனை வாகனத்தை டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த வாகனம் மூலம், மேலுார், கச்சிராயபாளையம், கரியாலுார், புதுப்பேட்டை, ரிஷிவந்தியம், தியாகதுருகம், ஜி.அரியூர், எலவனாசூர்கோட்டை, திருநாவலுார் ஆகிய அலகுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் காசநோய் முகாம் நடத்தப்படுகிறது. இதில் காச நோய்க்கான சளி மாதிரிகள் எடுப்பது, தேவைப்படுவோருக்கு நுண்கதிர் பரிசோதனை செய்வது உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பவானி, காசநோய் ஒழிப்பு திட்ட இணை இயக்குனர் செந்தில், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, காசநோய் அலுவலர் மருத்துவர் சுதாகர், நுரையீரல் நிபுணர் ராம்குமார், காசநோய் மருத்துவர் பொய்யாமொழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இலியாஸ்கான் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us