/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் பகுதியில் மஞ்சள் செடிகள் செழிப்பு
/
சங்கராபுரம் பகுதியில் மஞ்சள் செடிகள் செழிப்பு
ADDED : டிச 23, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் தொடர் மழையால் மஞ்சள் செடிகள் செழித்து வளர்ந்துள்ளது.
சங்கராபுரம் அடுத்துள்ள அரசம்பட்டு, பாலப்பட்டு ஆகிய கிராமங்களில் விவசாயிகள் மஞ்சள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். 6 மாத பயிரான மஞ்சள் செடி நன்கு வளர்ச்சி அடைந்தவுடன் அறுவடை செய்து சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள மஞ்சள் சந்தைக்கு கொண்டு செல்வது வழக்கம்.
கடந்த வாரம் பெய்த பெஞ்சல் புயல் மழை காரணமாக மஞ்சள் செடிகள் நன்கு செழித்து வளர்ந்து பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

