/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிரானைட் கற்களை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது
/
கிரானைட் கற்களை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது
ADDED : ஆக 14, 2025 12:42 AM

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே அரசு இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி கடத்த முயன்ற இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் அடுத்த கல்லந்தல் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில், அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக கிரானைட் கற்களை சிலர் வெட்டி எடுத்து கடத்துவதாக தகவல் கிடைத்தது.
அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கிரானைட் கற்களை வெட்டி கடத்தப்படுவது தெரியவந்தது. கி
கிரானைட் கற்கள் வெட்டி கடத்த முயன்ற வானுார் அடுத்த கரசானுார் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சக்திவேல், 36; வடகரைதாழனுாரை சேர்ந்த முத்து மகன் ஆனந்தன், 25; ஆகியோரை கைது செய்து, கிரானைட் வெட்டி எடுக்க பயன்படுத்திய இரண்டு கம்ப்ரஸர் டிராக்டர்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.