/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
/
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
ADDED : ஜன 14, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர்; அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, வடகரைத்தாழனூரில் சந்தேகிக்கும் வகையின் நின்றிருந்த இரு வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அதில், அவர்கள் அதே ஊரைச் சேர்ந்த தீர்த்தமலை மகன் அமல்ராஜ், 25; கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் உதயசங்கர், 29; என்பதும், கஞ்சா விற்க முயன்றது தெரிய வந்தது.
போலீசார் வழக்கு பதிந்து இருவரையம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிராம கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

