/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
/
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
ADDED : ஜன 20, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகவள்ளி, விஜயராகவன் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது, கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் மதுபாட்டில் விற்ற கருணாபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்,50; என்பவரை கைது செய்தனர்.
அதேபோல் ஜோகிதர் தெருவில் மதுபாட்டில் விற்ற ஆறுமுகம்,70; என்பவரை கைது செய்தனர்.
இருவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.