தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கஞ்சா விற்ற இருவர் கைது

 கஞ்சா விற்ற இருவர் கைது

 கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : ஜூன் 13, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சின்னசேலம் அடுத்த வி.கூட்டுரோடு மேம்பாலம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர்.உடனே போலீசார் விரட்டிச் சென்று இருவரையும் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் அங்கிருந்து தப்பினார். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் தலைவாசல் சார்வாய் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் தீனதயாளன்,18; தலைவாசல் சித்தேரி பகுதியை சேர்ந்த சுக்கு மகன் அபிஷேக், 20; என்பதும், தப்பியோடியது சித்தேரி பகுதியை சேர்ந்த பட்டத்து அரசன் மகன் பிரதீப், 22; என தெரிந்தது.

மேலும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிந்து தீனதயாளன், அபிஷேக் ஆகியோரை கைது செய்து 25 கிராம் கஞ்சா, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பிரதீப்பை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us