ADDED : ஜூன் 29, 2026 04:07 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: எடைக்கல் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவ இருவரை போலீசார் கைது செய்தனர்.
எடைக்கல் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். அப்போது, பாலி மயானம் அருகே, விருத்தாச்சலம் அடுத்த நாச்சியார்பேட்டையை சேர்ந்த இளங்கோவன் மகன் சத்தியகுமார், 22; எம்.பட்டி பகுதியை சேர்ந்த சிங்காரவேல் மகன் சிவா, 20; ஆகியோர் கஞ்சா விற்பது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 150 கிராம் கஞ்சாவை எடைக்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.
