ADDED : ஜன 21, 2026 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஹான்ஸ் விற்ற பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று தேவபாண்டலம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி ஜெயலட்சுமி, 48; என்பவரது கடையில் சோதனை செய்தனர். அங்கு, ஹான்ஸ் விற்பது தெரியவந்தது.
போலீசார் ஜெயலட்சுமியின் கடையில் இருந்து 42 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 200 விமல் பாக்குகளை பறிமுதல் செய்து, ஜெயலட்சுமியை கைது செய்தனர்.
அதேபோல் நேற்று மாலை அரசம்பட்டு கிராமத்தில் காசிநாதன் மகன் சக்திவேல், 35; என்பவரது பெட்டிக் கடையில் சோதனை செய்து 15 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

