ADDED : அக் 09, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது, கீழ்பாடியை சேர்ந்த உண்ணாமலை மனைவி சரோஜா,54; பாசாரை சேர்ந்த ராமு,56; ஆகியோர் வெவ்வேறு பகுதியில் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.
இதையடுத்து ராமு, சரோஜா ஆகியோரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.