/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில் விற்ற இரண்டு பேர் கைது
/
மது பாட்டில் விற்ற இரண்டு பேர் கைது
ADDED : டிச 20, 2024 11:43 PM
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையிலான போலீசார் நேற்று காலை வடக்கனந்தல், டேம் கோட்ரஸ் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த முருகன், 43; தனது வீட்டின் அருகில் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதே போல் டேம் கோட்ரஸ் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மனைவி அங்கம்மாள், 70; மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து இருவரையும் கைது செய்த கச்சிராயபாளையம் போலீசார் அவர்களிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.