/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலீசிடம் மொபைல்போன் திருட்டிய இருவர் கைது
/
போலீசிடம் மொபைல்போன் திருட்டிய இருவர் கைது
ADDED : அக் 22, 2025 11:38 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் மொபைல்போனை திருடி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய கட்டடத்திற்கு பின்புற ஓய்வறையில், போலீசார் ஓய்வெடுப்பர். இங்கு, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சிவகிருஷ்ணன், 56; கடந்த 20ம் தேதி இரவு பணி முடித்து ஓய்வு அறையில் துாங்கினார். சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்த சிவகிருஷ்ணன் மொபைல்போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சி.சி.டி.வி., கேமிராவை ஆய்வு செய்தபோது, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ரமேஷ், 28; சேலம் மாவட்டம், கூடலுாரை சேர்ந்த முனியப்பன் மகன் சரவணன் ,21; ஆகிய இருவரும், துாங்கி கொண்டிருந்த சிவகிருஷ்ணனின் மொபைல்போன் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.