/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருநாவலுாரில் இரு கார்கள் மோதி விபத்து; 5 பேர் காயம்
/
திருநாவலுாரில் இரு கார்கள் மோதி விபத்து; 5 பேர் காயம்
திருநாவலுாரில் இரு கார்கள் மோதி விபத்து; 5 பேர் காயம்
திருநாவலுாரில் இரு கார்கள் மோதி விபத்து; 5 பேர் காயம்
ADDED : ஜூலை 07, 2025 02:29 AM

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே இரு கார்கள் மோதி கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் அஸ்வின்குமார், 28; இவர் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனது மாருதி ஸ்விப்ட் டிசையர் காரில் சென்றார்.
அவருடன் உறவினர் ரவிச்சந்திரன் மகள் அஸ்வினி, 28; சென்றார்.
நேற்று மாலை 6:30 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த மடப்பட்டு மேம்பாலம் அருகே கார் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் தடுப்பு மீது ஏறி எதிர் திசையில் சென்றது. அப்போது, ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற கியா கார் மீது ஸ்விப்ட் கார் மோதியது.
இந்த விபத்தில் ஸ்விப்ட் காரில் பயணித்த அஸ்வின்குமார், அஸ்வினியும், கியா காரில் பயணித்த ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், 43; அவரது மனைவி வசந்தபிரியா, 41; மகள் தன்வே, 7; ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.
அங்கிருந்த பொதுமக்கள் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

