/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மான் வேட்டையாடிய இருவர் மிளகாய் பொடி துாவி தப்பியோட்டம்
/
மான் வேட்டையாடிய இருவர் மிளகாய் பொடி துாவி தப்பியோட்டம்
மான் வேட்டையாடிய இருவர் மிளகாய் பொடி துாவி தப்பியோட்டம்
மான் வேட்டையாடிய இருவர் மிளகாய் பொடி துாவி தப்பியோட்டம்
ADDED : நவ 30, 2024 07:01 AM

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுாரில் போலீசார் மீது மிளகாய் பொடியை துாவி தப்பிய மான் வேட்டையாடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 6:30 மணிளவில், தேவனுார் கூட்டு சாலையில், பைக்கில் துப்பாக்கி சகிதமாக வந்த நபர்களை நிறுத்தினர்.
பைக் நிற்காமல் சென்றதால் போலீசார், பைக்கை துரத்தி சென்றனர். அப்போது, பைக் பின்னால் உட்கார்ந்து சென்றவர் மிளகாய் பொடியை போலீசார் கண்களில் துாவினார். சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விடாமல் துரத்திச் சென்றனர்.
கீழையூர், உயர்மட்ட பாலம் இறக்கத்தில், பைக்கை விட்டுவிட்டு சிறிது துாரத்தில் துப்பாக்கி மற்றும் கையில் வைத்திருந்த மான் கறியை துாக்கியெறிந்து விட்டு 2 பேரும் தப்பிச் சென்றனர்.
துப்பாக்கி, பைக் மற்றும் மான் கறியை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிந்த சட்ட விரோதமாக மான் வேட்டையாடிய நபர்களை தேடி வருகின்றனர்.

