/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்பெண்ணை ஆற்றுத்திருவிழா இரு மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை
/
தென்பெண்ணை ஆற்றுத்திருவிழா இரு மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை
தென்பெண்ணை ஆற்றுத்திருவிழா இரு மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை
தென்பெண்ணை ஆற்றுத்திருவிழா இரு மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை
ADDED : ஜன 17, 2025 06:55 AM

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நாளை நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இரு மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்பொழுது கூட சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 325 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக இந்த ஆண்டு ஆற்று திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. திருக்கோவிலூர் தாசில்தார் ராமகிருஷ்ணன் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தினர்.
இதன் நிறைவாக திருவிழாவை நடத்துவது எனவும், காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி வைபவமும், அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். மாலை 3:00 மணிக்கு சுவாமி பந்தலடியிலிருந்து புறப்படும்.
வழக்கமாக விழா 6:00 மணிக்கு நிறைவடையும் நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக முன்கூட்டியே விழாவை நிறைவு செய்ய குழுவினர் முடிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லை பகுதியாக இருக்கும் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் இவ்விழாவை திருக்கோவிலூர் நிர்வாகம் உறுதி செய்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அதுல்யநாதீஸ்வரர், வீரபாண்டி அதுல்யநாதீஸ்வரர், தேவனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கு பெறும்.
எனவே இரு மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வருவார்கள் என்பதால், நேற்று அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத், பேரூராட்சி தலைவர் அன்பு, கண்டாச்சிபுரம் தாசில்தார் கிருஷ்ணா தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தண்ணீர் குறைவாக உள்ள வழித்தடங்களை தேர்வு செய்து, கூட்டத்தை கட்டுப்படுத்தி திருவிழாவில் பங்கேற்பது குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.