/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புகையிலை பொருட்கள் விற்ற இருவருக்கு அபராதம்
/
புகையிலை பொருட்கள் விற்ற இருவருக்கு அபராதம்
ADDED : நவ 12, 2025 06:27 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
தேசிய புகையிலை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ராஜா உத்திரவின்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் சுரேந்திரகுமார் ஆகியோர் சங்கராபுரம் அடுத்த பூட்டை, செம்பராம்பட்டு கிராமங்களில் உள்ள பெட்டிகடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 கடை உரிமையாளர்களிடமிருந்து 4 பாக்கெட் புகையிலை பொருட்களை கைபற்றி, கடை உரிமையாளர்களுக்கு தலா ரு.200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

