/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குளத்தில் தள்ளி வாலிபர் கொலை நண்பர்கள் இருவருக்கு வலை
/
குளத்தில் தள்ளி வாலிபர் கொலை நண்பர்கள் இருவருக்கு வலை
குளத்தில் தள்ளி வாலிபர் கொலை நண்பர்கள் இருவருக்கு வலை
குளத்தில் தள்ளி வாலிபர் கொலை நண்பர்கள் இருவருக்கு வலை
ADDED : மே 28, 2025 01:46 AM
உளுந்துார்பேட்டை:உளுந்தூர்பேட்டை அருகே போதையில் வாலிபரை அடித்து குளத்தில் தள்ளி கொலை செய்த, நண்பர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ், 20; கூலித் தொழிலாளி. இவர், நேற்று மதியம் நண்பர்கள் இருவருடன் மது வாங்கிக்கொண்டு பைக்கில், 6 கி.மீ., தொலைவில் உள்ள கிளியூர் அருகே தீர்த்த குளக்கரைக்கு குடிக்க சென்றார்.
அங்கு மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தும்போது, அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இரு நண்பர்களும் சுபாஷை சரமாரியாக அடித்து குளத்தில் தள்ளி விட்டனர்.
இதைக்கண்ட அப்பகுதி சிறுவர்கள் சத்தம் போட்டதால் இருவரும் தப்பியோடி தலைமறைவாயினர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் சிலர், குளத்தில் இறங்கி நீண்ட நேரம் தேடி சுபாஷின் உடலை மீட்டனர். திருநாவலுார் போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத சோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.