/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரண்டு ஆடுகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை
/
இரண்டு ஆடுகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை
ADDED : அக் 30, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்:  சின்னசேலம் அடுத்த சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசன், 64;   இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பண்ணை கொட்டகை அமைத்து ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்.
கடந்த 26 ம் தேதி மாலை 6 மணி அளவில் இருசன் தனக்கு சொந்தமான இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு ஆடுகளை விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை சென்று பார்த்தபோது கொட்டகையில் கட்டி இருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப்  பதிந்து விசாரித்து வருகின்றனர்.

