/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ் படைப்பாளர் சங்கத்தில் இருபெரும் விழா
/
தமிழ் படைப்பாளர் சங்கத்தில் இருபெரும் விழா
ADDED : ஆக 29, 2025 02:53 AM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தமிழ்ப் படைப்பாளர் சங்கம் மற்றும் இன்னர்வீல் சங்கம் சார்பில் அன்னை தெரேசா பிறந்த நாள் விழா மற்றும் இலக்கிய சொற்பொழிவு ஆகிய இருபெரும் விழா நடந்தது.
தமிழ்ப் படைப்பாளர் சங்கத் தலைவர் வேலு தலைமை தாங்கினார். வணிகர் சங்க பேரவை பொருளாளர் முத்துக்கருப்பன், ஓய்வூதியர் சங்க தலைவர் செல்வராஜ், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், துணைத் தலைவர் கமலநாதன் முன்னிலை வகித்தனர். தமிழ்ப் படைப்பாளர் சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார். அரிமா மாவட்ட தலைவர் வேலு, வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் மூர்த்தி, ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார் சாந்தகுமார், செல்லமுத்து, சாதிக்பாஷா, அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் சவுந்தரராஜன், பாரதி கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பள்ளி மாணவ, மாணவியர்கள் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய சொற்பொழிவாற்றினர். மாணவர்களுக்கு இன்னர்வீல் சங்க தலைவர் இந்துமதி செல்வமணி பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் இன்னர்வீல் உறுப்பினர்கள், தமிழ் படைப்பாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

