/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி
ADDED : ஆக 29, 2025 11:48 PM
சின்னசேலம் : சின்னசேலம் அருகே இரு இடங்களில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
சின்னசேலம் அடுத்த வி.கூட்ரோடு அருகே நேற்று முன்தினம் இரவு 2:00 மணிக்கு, 45 வயது மதிக்கத்தக்க நபர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார். இதே போல் நேற்று காலை 8:00 மணிக்கு, அம்மையகரம் தேசிய நெடுஞ்சாலையில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், வாகனம் மோதி இறந்து கிடந்தார்.
சின்னசேலம் போலீசார் இருவரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வி.ஏ.ஓ., கலைவாணி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து இருவர் மீதும் மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .