/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாராயம் குடித்து தொழிலாளி இறந்த வழக்கில் மேலும் இருவர் கைது
/
சாராயம் குடித்து தொழிலாளி இறந்த வழக்கில் மேலும் இருவர் கைது
சாராயம் குடித்து தொழிலாளி இறந்த வழக்கில் மேலும் இருவர் கைது
சாராயம் குடித்து தொழிலாளி இறந்த வழக்கில் மேலும் இருவர் கைது
ADDED : ஏப் 26, 2025 09:52 AM
கள்ளக்குறிச்சி : கடலுார் மாவட்டம், வேப்பூர் தாலுகா, நிராமணியை சேர்ந்த தங்கராசு, 70; தச்சுத் தொழிலாளி. இவர் கடந்த, 2024ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி கள்ளக்குறிச்சி பள்ளிவாசல் அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கை படி, தங்கராசு விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தது தெரிந்தது. இதனால் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்தது.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் கூடுதலாக வழக்கு பதிந்து, ஏற்கனவே சாராய வழக்கில் கைதான கோட்டைமேட்டை சேர்ந்த கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், 48; உட்பட 10 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மதுரவாயல் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த காண்டீபன் மகன் சிவக்குமார்,38; உட்பட இருவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து, சிவக்குமார் உட்பட இருவரை கள்ளக்குறிச்சி போலீ சார் நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
தச்சு தொழிலாளி தங்கராசு இறப்பு வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.

