/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு தரப்பினர் மோதல்: 7 பேர் மீது வழக்கு பதிவு
/
இரு தரப்பினர் மோதல்: 7 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜன 19, 2025 06:32 AM
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலுமணி,61; கடந்த 16ம் தேதி இவரது பேரன் எழில்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் ஆகாஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனை அறிந்த வேலுமணி இருவரையும் சமரசம் செய்தார். உடன் ஆகாஷ் தரப்பினர் ஒன்று சேர்ந்து, வேலுமணி உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை தாக்கினர்.
தொடர்ந்து, மறுநாள் 17ம் தேதி வேலுமணி தரப்பினர் ஒன்று சேர்ந்து நல்லதம்பி மற்றும் அவரது சித்தப்பா பரமசிவத்தை தாக்கினர்.
இச்சம்பவம் தொடர்பாக வேலுமணி அளித்த புகாரின் பேரில், ஆகாஷ், நல்லதம்பி, வீராசாமி ஆகியோர் மீதும், நல்லதம்பி அளித்த புகாரின் பேரில் வேலுமணி, பெரியசாமி, பாண்டியன், எழில்குமார் ஆகியோர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

