/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு தரப்பு மோதல்; 6 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பு மோதல்; 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 10, 2025 09:03 PM
திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் டாஸ்மாக் கடை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திருக்கோவிலுார், சைலோமைச் சேர்ந்தவர் ஏனோக் தேவஜெபராஜ், 35; அவரது மைத்துனர் நிரஞ்சன், 32; இருவரும் கனகனந்தல் டாஸ்மாக் அருகே நேற்று முன்தினம் மாலை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சந்தைப்பேட்டையைச் சேர்ந்த சதாம் உசேன், 32; அவரது நண்பர்கள் மணி, பாபு ஆகியோர் ஏனோக் தேவஜெயராஜிடம் தகராறு செய்து தாக்கினர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், 6 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.