/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு தரப்பு மோதல்; 7 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பு மோதல்; 7 பேர் மீது வழக்கு
ADDED : அக் 08, 2025 12:01 AM
திருவெண்ணெய்நல்லுார்;உளுந்துார்பேட்டை அருகே மாடு ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் ஓடை தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி கீர்த்தனா, 29; இவர் கடந்த 4ம் தேதி மாலை 6:30 மணியளவில் குழந்தைகளுடன் அவரது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர் அவ்வழியாக மாடு ஓட்டி சென்ற போது, வீட்டு வாசலில் அமர்ந்திருந்த கீர்த்தனா மீது மாடு முட்டுவது போல் சென்றது.
அதனால் கோபமடைந்த கீர்த்தனா மாடு ஓட்டி சென்ற மதியழகனை திட்டினார். அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பு அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் மதியழகன், முனியம்மாள், காயத்ரி, கீர்த்தனா, ஆறுமுகம், பழனிவேல், குபேரன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.