/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது
/
லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது
ADDED : நவ 14, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ஒரு கடையில், சின்னக்கண்ணு மகன் துரைராஜ்,55; பாலு மகன் கார்த்திக்,34; ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்றது தெரிந்தது. இதையடுத்து துரைராஜ், கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.950 மதிப்புள்ள 10 லாட்டரி சீட்டுக்களை கள்ளக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர்.