/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருநாவலுார் வாலிபர் கொலையில் சிறுவன் உட்பட 2 பேர் கைது
/
திருநாவலுார் வாலிபர் கொலையில் சிறுவன் உட்பட 2 பேர் கைது
திருநாவலுார் வாலிபர் கொலையில் சிறுவன் உட்பட 2 பேர் கைது
திருநாவலுார் வாலிபர் கொலையில் சிறுவன் உட்பட 2 பேர் கைது
ADDED : அக் 30, 2025 07:41 AM

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த இருந்தை பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் மகன் அந்தோணி ஆரோக்கியஜோ, 20; இவர், கடந்த 27ம் தேதி இரவு அப்பகுதியிலுள்ள மாதா கோவில் அருகே முகம் சிதைத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். அப்போது, அதே இருந்தை பகுதியை சேர்ந்த ராஜா மகன் லிசன், 20; மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து இரும்பு ராடால் தாக்கி அந்தோணி ஆரோக்கியஜோவை கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த 2023 ஆண்டு, பாலியல் பலாத்கார வழக்கில் ராஜாவின் மற்றொரு மகன் தேவா மற்றும் அந்தோணி ஆரோக்கியஜோ சம்மந்தப்பட்டுள்ளனர். ஆனால், அந்த வழக்கில், திருநாவலுார் போலீசாரால், தேவா மட்டும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தனது சகோதரர் தேவாவை கைது செய்ததற்கு, அந்தோணி ஆரோக்கியஜோ தான் காரணம் என, அவரது சகோதரர் லிசன் கருதினார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, தனது நண்பரான 16 வயது சிறுவனுடன் சேர்த்து, அந்தோணி ஆரோக்கிய ஜோவை மது குடிக்க அழைத்து சென்று, போதை தலைக்கேறியதும், இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

