sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் விவசாயி உட்பட 2 பேர் பலி

/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் விவசாயி உட்பட 2 பேர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் விவசாயி உட்பட 2 பேர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் விவசாயி உட்பட 2 பேர் பலி


ADDED : நவ 03, 2024 04:47 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி உட்பட 2 பேர் இறந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கல்சிறுநாகலுார் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 45; விவசாயி.

அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜ் குமார், 30; இருவரும் நேற்று முன்தினம் இரவு ஸ்பிளண்டர் பைக்கில் எலவனாசூர்கோட்டை நோக்கி பாலத்தின் சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை ஏழுமலை ஓட்டினார்.

9:00 மணியளவில் எதிரே ரஹிமான் தக்கா பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகன் வெங்கடேஷ், 27; சுப்ரமணி மகன் கங்காதுரை, 28; இருவரும் வந்த பல்சர் பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

படுகாயமடைந்த ராஜ்குமார், வெங்கடேஷ், கங்கா துரை ஆகிய 3 பேரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நள்ளிரவு 12:00 மணிக்கு முண்டிம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜ்குமார் இறந்தார்.விபத்து குறித்து எலவனா சூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us