தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இரு வேறு விபத்துகளில் கார் மோதி 2 பேர் பலி

 இரு வேறு விபத்துகளில் கார் மோதி 2 பேர் பலி

 இரு வேறு விபத்துகளில் கார் மோதி 2 பேர் பலி


ADDED : பிப் 09, 2026 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 02:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.

விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லையைச் சேர்ந்தவர் தேவராஜ், 70; இவர், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் உளுந்துார்பேட்டை புறவழிச்சாலையின் குறுக்கே கடந்து சென்றார்.

அப்போது, உளுந்துார்பேட்டையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற மகேந்திரா பொலிரோ கார் தேவராஜ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சின்னசேலம் கோயம்புத்துார் மாவட்டம், துடியலுார் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன், 54; இவர் நேற்று சின்னசேலம் அடுத்த செம்பாக்குறிச்சி திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் வந்துள்ளார்.

நேற்று மதியம் 2:30 மணியளவில் ஆனந்தன் மொபட்டில் செம்பாக்குறிச்சி கூட்ரோடு அருகே சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் ஆனந்தன் படுகாயமடைந்தார். உடன், சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆனந்தன் இறந்தார்.

கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us