/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி செயலர் மீது தாக்குதல் இரண்டு வாலிபர்கள் கைது
/
ஊராட்சி செயலர் மீது தாக்குதல் இரண்டு வாலிபர்கள் கைது
ஊராட்சி செயலர் மீது தாக்குதல் இரண்டு வாலிபர்கள் கைது
ஊராட்சி செயலர் மீது தாக்குதல் இரண்டு வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 12, 2025 11:26 PM
சின்னசேலம்: அம்மையகரம் கிராம ஊராட்சி செயலாளரை தாக்கிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாகண்ணு மகன் விஜயகாந்த், 37; அம்மையகரம் ஊராட்சி செயலர். விஜயகாந்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் லோகேஷ்வரன், 22; ரவி மகன் பிரவீன்குமார், 22; ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு, விஜயகாந்த் அம்மையகரம் ஊராட்சி அலுவலகம் முன்பு நின்றிருந்தார். அங்கு வந்த லோகேஷ்வரன் மற்றும் பிரவீன்குமார் இருவரும், விஜயகாந்தை தாக்கினர். படுகாயம் அடைந்த விஜயகாந்த் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் லோகேஷ்வரன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.