/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் ஒன்றிய குழு கூட்டம்
/
தியாகதுருகம் ஒன்றிய குழு கூட்டம்
ADDED : ஜன 24, 2025 11:17 PM

தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று நடந்தது.
தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள அரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார்.
துணை சேர்மன் நெடுஞ்செழியன், பி.டி.ஓ., கொளஞ்சிவேல் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளிலும் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், கோடை காலம் துவங்குவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ஆலோசனை நடந்தது.
ஒவ்வொரு ஊராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டிய அரசு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
துணை பி.டி.ஓ., க்கள் அண்ணாதுரை, மணி, முத்தமிழ்செல்வன், சம்பூர்ணம், ஒன்றிய பொறியாளர்கள் ராமர், பழனிவேல், சபான்கான் கலந்து கொண்டனர்.