/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பட்டை நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
உளுந்துார்பட்டை நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
உளுந்துார்பட்டை நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
உளுந்துார்பட்டை நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 24, 2025 03:32 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகராட்சி துாய்மை பணியாளர்கள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகராட்சி துாய்மை பணியாளர்கள் சார்பில் ஜெயராமன் தலைமை தாங்கினார். துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துாய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும். அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையாக பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வீராசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்டத் தலைவர் விஜயகுமார், கவுரவத் தலைவர் தங்கராசு, ஓய்வு பெற்றோர் அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன், மின் ஊழியர் அமைப்பு ராஜாமணி, சி.ஐ.டி.யு., முன்னாள் மாவட்ட பொருளாளர் ஷேக்சலாவுதீன், சி.பி.எம்., நகர செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.