/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதுக்குட்பட்டோர் தேர்வு
/
மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதுக்குட்பட்டோர் தேர்வு
மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதுக்குட்பட்டோர் தேர்வு
மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதுக்குட்பட்டோர் தேர்வு
ADDED : ஏப் 16, 2025 11:54 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு வரும் 20ம் தேதி கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மைதானத்தில் காலை 9:30 மணிக்கு நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் லட்சுமிநாராயணன் கூறுகையில், 'மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 19 வயதுக்குட்பட்ட மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் கலந்து கொள்பவர்கள் 1.9.2006 தேதி அன்றோ அதன் முன்போ பிறந்திருக்க வேண்டும்.
இத்தேர்வில் பங்குபெறும் அனைத்து வீரர்களும் ஆதார் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9944000946 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்' என்றார்.