/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடையாளம் தெரியாதவர் துாக்குபோட்டு தற்கொலை
/
அடையாளம் தெரியாதவர் துாக்குபோட்டு தற்கொலை
ADDED : செப் 01, 2025 12:59 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே 45 வயது மதிக்கத்தக்கவர் மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செ ய்து கொண்டார்.
திருப்பாலபந்தலை அடுத்த ஜ.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனேசன். கடந்த 29 ம் தேதி தனது வயலுக்கு சென்ற போது, நிலத்தில் உள்ள புளிய மரத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் உடல் துாக்கில் தொங்கியபடி இருந்தது.
இது குறித்து திருப்பாலபந்தல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மரத்திலிருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் யார், அவரது முகவரி, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.