/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் ஒன்றிய குழு கூட்டம்
/
கல்வராயன்மலையில் ஒன்றிய குழு கூட்டம்
ADDED : மே 22, 2025 11:42 PM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் ஒன்றிய குழு கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய சேர்மன் சந்திரன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பாச்சாபீ ஜாகீர் உசேன், பி.டி.ஓ., ஜோசப் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர்.
உதவி பொறியாளர் அருண் ராஜா வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை விரைந்து கட்டி முடிக்க ஆலோசனை வழங்குதல்; குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் கழிவு நீரை அகற்றுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், துணை பி.டி.ஓ.,க்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், பிரபாகரன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.