தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அடிப்படை வசதி கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதி கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதி கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை


ADDED : செப் 11, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 04:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராம காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று சங்கராபுரம் ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடந்தது.

கிளைத் தலைவர் பாரதிராஜா தலைமை தாங்கினார். செயலாளர் தர்மதுரை, ரோகித், பேரின்பன், கலையரசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவகுமார், தலைவர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் பகத்சிங், தலைவர் சரத்குமார், பொருளாளர் ஏழுமலை, தமிழ்மாறன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பி.டி.ஓ.,க்கள் அழகுராஜா, சுமதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us