/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அபராதம்; போலீசாரின் தில்லாலங்கடியால் புலம்பல்
/
வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அபராதம்; போலீசாரின் தில்லாலங்கடியால் புலம்பல்
வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அபராதம்; போலீசாரின் தில்லாலங்கடியால் புலம்பல்
வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அபராதம்; போலீசாரின் தில்லாலங்கடியால் புலம்பல்
ADDED : ஜன 09, 2024 01:17 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், நகரின் முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.
மொபைல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது உட்பட விதிமுறைகள் மீறும் வாகனங்களை நிறுத்தி இன்சூரன்ஸ், லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்.
இதற்காக பிரத்யேகமாக வழங்கியுள்ள கையடக்க இயந்திரம் மூலம் 'சலான்' விநியோகிக்க வேண்டும்.
ஆனால், வாகன சோதனையில் இருக்கும் போலீசார், வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வது கிடையாது. வாகனங்கள் செல்லும் போது வாகன பதிவெண்ணை நோட்டில் எழுதிக்கொண்டு, செயலியில் பதிவிட்டு அபராதம் விதிக்கின்றனர்.
அதேபோல், சாலையோரம் நிற்கும் இரு சக்கர வாகனங்களின் எண்களை குறித்து வைத்தும் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த அபராதம் பற்றி சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதுவும் தெரியாது. வாகனத்தை விற்பனை செய்தல், வாகன உரிமம் புதுப்பித்தல், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செல்லும் போது தான் அபராதம் விதித்திருப்பது தெரிகிறது. எங்கே, எந்த இடத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறினோம் என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பத்தில் புலம்பி வருகின்றனர். தினசரி 'டார்கெட்'டை முடிப்பதற்காக போலீசார் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.
வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்து எச்சரித்து அபராதம் விதிப்பதன் மூலம் மட்டுமே அடுத்த முறை அந்த தவறை சரிசெய்து கொள்வதற்கான வழிவகைகள் ஏற்படும். இல்லையெனில் தொடர்ந்து சாலை விதிமுறைகளை மீறுவது தொடர்ந்து காணப்படும்.
போலீசாரின் இந்த தில்லாலங்கடி பணி வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை நிறுத்தி முறையாக விசாரித்து அபராதம் விதிக்க போலீசாருக்கு எஸ்.பி., அறிவுறுத்த வேண்டும்.