/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உருது சரக வட்டார கல்வி அலுவலகம் கள்ளக்குறிச்சியில் திறப்பு விழா
/
உருது சரக வட்டார கல்வி அலுவலகம் கள்ளக்குறிச்சியில் திறப்பு விழா
உருது சரக வட்டார கல்வி அலுவலகம் கள்ளக்குறிச்சியில் திறப்பு விழா
உருது சரக வட்டார கல்வி அலுவலகம் கள்ளக்குறிச்சியில் திறப்பு விழா
ADDED : நவ 24, 2024 07:41 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் உருது சரக வட்டார கல்வி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, உருது சரக வட்டார கல்வி அலுவலர் முஜீர்பாஷா தலைமை தாங்கினார். தமிழ்நாடு உருது பள்ளி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் அப்துல்அஜீஸ், தலைவர் அமிருத்தீன், பொருளாளர் தர்வேஷ்மொய்தீன், மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற தொடக்க கல்வி அலுவலர் அப்துல்மஸ்ஹர் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிமணி, அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து அலுவலக பெயர் பலகை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில், உருது சரக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.