/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வி.புத்துார் மாரியம்மன் கோவில் தேர் தீமிதி விழா
/
வி.புத்துார் மாரியம்மன் கோவில் தேர் தீமிதி விழா
ADDED : ஜூலை 28, 2025 10:03 PM

திருக்கோவிலுார்; வி.புத்துார் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர் மற்றும் தீ மிதி விழா நடந்தது.
அரகண்டநல்லுார் அடுத்த வி.புத்துார் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 9ம் நாளான நேற்று தேர் தீமிதி விழா நடந்தது. முன்னதாக, காலை 9:30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதியில் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். அம்மனுக்கு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
மாலை 3:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேர் நிலையை அடைந்தவுடன் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.