/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிட்கோ தொழிற்பேட்டையில் காலி மனைகள் விற்பனை
/
சிட்கோ தொழிற்பேட்டையில் காலி மனைகள் விற்பனை
ADDED : அக் 07, 2024 11:11 PM
கள்ளக்குறிச்சி: கலெக்டர் பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் சிட்கோ தொழிற்பேட்டைகளில் ஒதுக்கீடு செய்யப்படாத மற்றும் காலி தொழில்மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. அதன்படி, உளுந்துார்பேட்டை தாலுகா, ஆசனுாரில் 5 தொழில் மனைகளும், சங்கராபுரம் தாலுகா, காட்டுவனஞ்சூரில் 40 தொழில் மனைகளும் ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் உள்ளது. தொழில் மனைகளை வாங்க விருப்பமுள்ளவர்கள் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள பிற தொழிற்பேட்டைகளின் காலி தொழில் மனைகளின் விபரங்களையும் இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
காலி தொழில்மனைகளை பார்வையிட, கடலுார் செம்மண்டலம் சிட்கோ தொழிற்பேட்டை கிளை மேலாளரை நேரிலும், 94450 06573 என்ற தொலைபேசி எண்ணிலும் அல்லது bmcdr@tansidco.org என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.