/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கச்சிராயபாளையம் பகுதிகளில் வடமாடு பிடிக்கும் நிகழ்ச்சி
/
கச்சிராயபாளையம் பகுதிகளில் வடமாடு பிடிக்கும் நிகழ்ச்சி
கச்சிராயபாளையம் பகுதிகளில் வடமாடு பிடிக்கும் நிகழ்ச்சி
கச்சிராயபாளையம் பகுதிகளில் வடமாடு பிடிக்கும் நிகழ்ச்சி
ADDED : ஜன 17, 2025 06:54 AM

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வடமாடு பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பொங்கல் திருநாளின் இறுதி நாளான காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று கச்சிராயபாளையம் வடக்கு நந்தல், மாத்தூர், நத்தம் ,மண்மலை, நல்லாத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில் வடமாடு பிடிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முன்னதாக அந்ததந்த பகுதிகளில் கோவில் காளைகளை அலங்கரித்து மேல, தாளங்களுடன் ஊர்வலமாக கோவில் அருகில் அழைத்து வந்து நிகழ்ச்சியை துவங்கினர்.
இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளை நீண்ட வட கயிறுடன் காளைகள் இணைக்கப்பட்டது.
அந்த காளைகளை அப்பகுதி இளைஞர்கள் குழுவாக இணைந்து ஆர்வமுடன் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.