/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லுார் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா
/
அரகண்டநல்லுார் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா
ADDED : ஜூன் 01, 2025 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடியேற்ற விழாவையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும், 8:30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து, சோமஸ்கந்தருக்கு தீபாராதனை நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 6ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 8ம் தேதி காலை 10:30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.