ADDED : அக் 07, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் வள்ளலார் அவதார தின விழா நடந்தது.
மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். அகவல் தமிழ் படைப்பாளர் சங்க முன்னாள் தலைவர் இளையாபிள்ளை, திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி முன்னிலையில் அகவல் படிக்கப்பட்டு உலக மக்கள் நலனுக்காக பிரார்த்திக்கப்பட்டது.
பாலப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் சன்மார்க்க கொடி ஏற்றினார். தொடர்ந்து சிறப்பு ஜோதி தரிசனம் நடந்தது.