/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வள்ளியம்மை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
வள்ளியம்மை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 13, 2024 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில் 5வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி தலைவர் பூபதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ரீனா வரவேற்றார்.
சீர்காழி அரசு கலைக் கல்லுாரி முதல்வர் முரளி குமரன் முன்னிலை வகித்தார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் டாக்டர் பெருவழுதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 583 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி தலைவர் செல்வராஜ், வழக்கறிஞர் அருணாச்சலம், லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் உலகளந்தான் மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.