/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வள்ளியம்மை கல்லுாரி மாணவிகள் முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றி
/
வள்ளியம்மை கல்லுாரி மாணவிகள் முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றி
வள்ளியம்மை கல்லுாரி மாணவிகள் முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றி
வள்ளியம்மை கல்லுாரி மாணவிகள் முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றி
ADDED : அக் 13, 2025 12:19 AM

திருக்கோவிலுார்; விழுப்புரம் அரசு விளையாட்டு அரங்கில் நடந்த முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி விழுப்புரம் அரசு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரி மாணவிகள் கைப்பந்து, வாலிபால், புட்பால், ஹாக்கி, கிரிக்கெட், பேட்மிட்டன் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவிகள் 1.24 லட்சம் ரொக்க பரிசு, கேடயம், சான்றிதழ்கள் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லுாரி சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி தாளாளர் பூபதி தலைமை தாங்கி மாணவிகளை பாராட்டி பேசினார். கல்லுாரி முதல்வர் தென்னரசி வரவேற்றார். துணை முதல்வர் ரீனா, உடற்கல்வி ஆசிரியை பாரதி, துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் கல்லுாரி மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.