/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வள்ளியம்மை மகளிர் கல்லுாரி ஆண்டு விழா
/
வள்ளியம்மை மகளிர் கல்லுாரி ஆண்டு விழா
ADDED : ஏப் 13, 2025 06:47 AM

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார், வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில், 11 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
திருக்கோவிலுார், கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் செல்வராஜ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, விளை யாட்டு போட்டியை துவக்கி வைத்தார். பேராசிரியர் சத்திய பிரியா வரவேற்றார்.
ஆண்டு விழாவை கோவை அவிநாசிலிங்கம் பல்கலை தமிழ்த் துறை உதவி பேராசிரியர் குருஞானாம்பிகா குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார். உதவி பேராசிரியர் ரீனா வரவேற்றார். கல்லூரி முதல்வர் தென்னரசி ஆண்டறிக்கை வாசித்தார்.
கல்லுாரி தலைவர் பூபதி ஆண்டு மலரை வெளியிட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பேராசிரியர் பவித்ரா நன்றி கூறினார்.

